குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
முதலாவது பிரிக்ஸ் எம்எஸ்எம்இ கூட்டம் ஆக்ராவில் 2026 ஜூன் 19 அன்று நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
18 JUN 2026 12:38PM by PIB Chennai
முதலாவது பிரிக்ஸ் குறு, சிறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் கூட்டம், 3-வது சிறு, நடுத்தர தொழில்துறை பணிக்குழுக் கூட்டம் ஆகியவை உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் 2026 ஜூன் 19 அன்று நடைபெறுகிறது. மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
முதலாவது பிரிக்ஸ் எம்எஸ்எம்இ மன்றக் கூட்டத்தில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஈரான், ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியட்நாம், இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்முனைவோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
உலகளாவிய எம்எஸ்எம்இ சூழல் அமைப்புகளை வலுப்படுத்துதல், நீடித்த தன்மையை ஊக்குவித்தல், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிப்பதே இக்கூட்டத்தின் நோக்கமாகும். இந்தியாவின் எம்எஸ்எம்இ துறை 8.6 கோடிக்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டதாகும். இத்துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31.1 சதவீதத்திற்கும் அதிகமாகவும், உற்பத்தித் துறையில் 35.4 சதவீதமாகவும் ஏற்றுமதியில் 48.58 சதவீதமாகவும் பங்களிப்பைக் கொண்டுள்ளது. அதே வேளையில் நாட்டில்பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274457®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2274831)
आगंतुक पटल : 9