ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேம்படுத்தப்பட்ட நீர்நிலை மேலாண்மைக்கான தேசிய தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் குறித்து தேசிய அளவில் இரண்டாவது கலந்தாய்வுக் கூட்டம்

प्रविष्टि तिथि: 18 JUN 2026 10:40AM by PIB Chennai

மேம்படுத்தப்பட்ட நீர்நிலை மேலாண்மைக்கான தேசிய தொழில்நுட்ப வழிகாட்டுதல்களின் வரைவு குறித்து தேசிய அளவிலான இரண்டாவது கலந்தாலோசனைக் கூட்டம்  2026 ஜூன் 17-18 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. இதற்கு உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் 'புதுமையான மேம்பாட்டின் மூலம் வேளாண் மீள்திறனுக்காக நீர்நிலைகளுக்குப் புத்துயிரூட்டுதல்' (ரிவார்ட்) திட்டத்தின் கீழ்,மத்திய  ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளத் துறையின் அறிவுசார் பங்குதாரரான தேசிய மழை நீர்ப்பிடிப்பு  பகுதி ஆணையம் ஏற்பாடு செய்தது.

தொடக்க அமர்வில்நில வளத் துறையின் செயலாளர் திரு நரேந்திர பூஷன்தேசிய மழை நீர்ப்பிடிப்பு  பகுதி ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சந்திர சேகர் குமார், மூத்த அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்தாய்வில்நீர்நிலைப் பாதுகாப்பு மேம்பாடு, இயற்கை வள மேலாண்மையில் ஈடுபட்டுள்ள முக்கியப் பங்குதாரர்களான நில வளத் துறைதேசிய மழை நீர்பிடிப்புப் பகுதி ஆணையம்உலக வங்கிரிவார்ட் மாநிலங்கள் (கர்நாடகா, ஒடிசா)நபார்டு வங்கிதேசியசர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பாலைவனமாதலையும் வறட்சியையும் முறியடிப்பதற்கான உலக தினத்தை முன்னிட்டுமண்ணைப் பாதுகாக்கவும்தரமிழந்த நிலப்பரப்புகளை மீட்டெடுக்கவும்மழைநீர்ப்பிடிப்புப் பகுதிகளை மேம்படுத்தவும்நீர்நிலைப் பாதுகாப்பு மேம்பாட்டின் மூலம் ஒரு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்யவும் திரு நரேந்திர பூஷன் எனது மண்,எனது கடமை” என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை வெளியிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274394&reg=3&lang=1  

***

SS/SMB/SH


(रिलीज़ आईडी: 2274817) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali