பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உள்ளார்ந்த ஞானத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 09 APR 2026 8:04AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த அகிலத்தின் உண்மையான சாரமாக விளங்கும் 'உள்ளார்ந்த ஞானத்தின்' முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்துப் பிரதமர், நமது பாரம்பரியமும் கலாச்சாரமும் உண்மையான அறிவும் அதன் சரியான பயன்பாடுமே ஒரு தேசத்தின் முன்னேற்றத்திற்கு அடிப்படை  என்று நமக்குத் தொடர்ந்து கற்பித்து  கொண்டு வருகின்றன என்று கூறினார். இந்தப் பாதையைப் பின்பற்றி, இன்று நமது நாட்டின் இளைஞர்கள் ஒரு வளமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நமக்குள்ளே குடியிருக்கும், சாதாரண அறிவைக் கடந்த இந்த மேலான ஞானத்தையே சான்றோர்களும் அறிஞர்களும் போற்றி வணங்குகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்விவரங்களுக்குஇந்தஆங்கிலச்செய்திக்குறிப்பைக்காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250318&reg=3&lang=2

----

SS/VK/KPG/RJ


(रिलीज़ आईडी: 2274473) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam