சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப்பொருள் இல்லாத இந்தியா விழிப்புணர்வு வாரம்: மத்திய அமைச்சர் திரு.வீரேந்திரகுமார் தொடங்கிவைத்தார்!
प्रविष्टि तिथि:
17 JUN 2026 5:31PM by PIB Chennai
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 'போதைப்பொருள் இல்லாத இந்தியா' (ஜூன் 17–26) விழிப்புணர்வு வாரத்தை தொடங்கியுள்ளது.
"போதைப்பொருள் இல்லாத இந்தியா – வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடையாளம்" என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும்.
மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அப்போது, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க இளைஞர்களின் பங்களிப்பும், சமூக பங்கேற்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார். மேலும், தன்னார்வலர்களின் பணிகளைக் கண்காணிக்க 'போதைப்பொருள் ஒழிப்பு நண்பா்' தனிநபர் டேஷ்போர்டு மற்றும் விழிப்புணர்வு குறும்படம் ஆகியவற்றை அவர் அறிமுகப்படுத்தினார்.
அடுத்த பத்து நாட்களுக்கு நாடு முழுவதும் பேரணிகள், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்தில் இணைய விரும்புபவர்கள் அமைச்சகத்தின் இணையதளம் வழியாக 'போதைப்பொருள் ஒழிப்பு நண்பராகப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274105®=3&lang=1
செய்தி அடையான எண்:2274105
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2274353)
आगंतुक पटल : 8