மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

சமூக மாற்றத்தில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் ஆற்றிய நினைவுச் சொற்பொழிவு

प्रविष्टि तिथि: 17 JUN 2026 6:37PM by PIB Chennai

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இன்று "சமூக மாற்றத்தில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்த இந்தியாவின் கண்ணோட்டம்" என்ற தலைப்பில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ், மதிப்புமிக்க சர் சையத் அகமது நினைவுச் சொற்பொழிவு ஆற்றினார். சர் சையத் அகமது கானின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் நடத்தப்படும் வருடாந்திர நினைவுச் சொற்பொழிவுத் தொடரின் ஒரு பகுதியாக, இந்தப் பல்கலைக்கழகத்தின் சர் சையத் அகாடமி இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

கல்வியாளர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுச் சிந்தனையாளர்கள் அடங்கிய அறிவார்ந்த கூட்டத்தில் உரையாற்றிய திரு. ஹரிவன்ஷ், சர் சையத் அகமது கானின் சீர்திருத்தக் கொள்கைகளை நினைவுகூர்ந்தார். நாட்டின் முன்னேற்றத்திற்கு நவீன அறிவையும், அறிவியல் மனப்பான்மையையும் ஏற்றுக்கொள்வது இன்றியமையாதது என்று குறிப்பிட்டார். பல்வேறு நாடுகள், காலகட்டங்களில் இருந்து சுவாரஸ்யமான உதாரணங்களை மேற்கோள் காட்டிய அவர், உலக அளவில் சமூகங்களை வடிவமைப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து அவர் எடுத்துரைத்தார்.

சமூக மாற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவியாகத் தொழில்நுட்பம் இருந்தபோதிலும், அதன் பலன்கள் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கவும், தொழில்நுட்பப் புதுமைகள் இந்தியாவின் சமூக, கலாச்சார யதார்த்தங்களில் வேரூன்றியிருப்பதை உறுதி செய்யவும், மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274161&reg=3&lang=1

(Release ID: 2274161)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2274346) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी