மாநிலங்களவைச் செயலகம்
உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் 381-வது அறிக்கை சமர்ப்பிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUN 2026 6:45PM by PIB Chennai
மாநிலங்களவை உறுப்பினர் திரு திக்விஜய் சிங் தலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலம், விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது 381-வது அறிக்கையை இன்று (16.06.2026) மாநிலங்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்தது. மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித்துறை சார்ந்த 2025-26 நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கைகள் குறித்த குழுவின் முந்தைய 364-வது அறிக்கையின் பரிந்துரைகள் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து இதில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
முன்னதாக 2026 ஜூன் 1 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்தில் இந்தத் திட்ட அறிக்கை விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியான ஆசிரியர்களுக்கான காலமுறைப் பதவி உயர்வுகளை உறுதி செய்தல், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண புதிய சீர்திருத்தங்களை விரைவாக அமல்படுத்துதல் குறித்தும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை https://sansad.in/rs/committees/16?departmentally-related-standing-committees என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273676®=3&lang=1
***
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2274270)
வருகையாளர் எண்ணிக்கை : 59