ஆசியாவில், வளர்ந்து வரும் சிறந்த திரைப்படங்கள், மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்படுகிறது
ஆசியாவில் வளர்ந்து வரும் சிறந்த திரைப்படங்களைக் காட்சிப்படுத்தும் வகையில், 19-வது மும்பை சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
இந்தத் திரைப்பட விழாவில், ஆசியாவின் மிகவும் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றான புசான் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டக் குறும்படங்களின் சிறப்புத் தொகுப்பான 'புசான்: நெக்ஸ்ட் வேவ்' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வளமையான திரைப்படக் கலாச்சாரம், உற்சாகம் மிகுந்த உள்நாட்டுத் திரைப்படத் துறையின் ஆதரவுடன், புசான் ஒரு திரைப்பட நகரமாக வலுவான நற்பெயரை நிலைநாட்டியுள்ளது. புசான் சர்வதேசத் திரைப்பட விழா, புசான் சர்வதேசக் குறும்பட விழா போன்ற புகழ்பெற்ற நிகழ்வுகளின் தாயகமான இந்த நகரம், வளர்ந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு படத்தொகுப்புகளைத் திரையிடுவது, சமூக நிகழ்ச்சிகள், தொழில் துறை ஈடுபாட்டு முயற்சிகள், பயிற்சிப் பட்டறைகள் ஆகியவற்றுக்கான சூழலை வழங்குகிறது. 19-வது மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவின் 'புசான்: நெக்ஸ்ட் வேவ்' பிரிவில், நேர்த்தியான, தனித்துவத் திரைப்படப் பாணிகள் மூலம் பல்வேறு கருப்பொருள்களை ஆராயும் ஐந்து திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
'மலர்களைப் புகைப்படம் எடுக்கும் ஒரு மனிதன்' என்ற திரைப்படம், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொரியா முழுவதும் பயணம் செய்து காட்டு மலர்களைப் புகைப்படம் எடுத்து வரும் புகைப்படக் கலைஞர் ஜங் மியுங் கிம் என்பவரின் கதையை விளக்குகிறது. தற்போது அவர் ஒரு கடுமையான நோயை எதிர்கொண்ட போதிலும், தனது பணியை மகிழ்ச்சியாகவும், சிறந்த நோக்கத்திற்காகவும் தொடர்ந்து மேற்கொள்கிறார். இயற்கை, புகைப்படக்கலையின் மீதான பேரார்வம் தனது வாழ்விற்குத் தொடர்ந்து அர்த்தம் தருவதாக என்னும் ஒரு மனிதனின் நெகிழ்ச்சியான கதையாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274039®=3&lang=1
***
SS/SV/SH
रिलीज़ आईडी:
2274215
| Visitor Counter:
7