மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானில் 7.5 கோடி பேர் ராஜஸ்தான் குடும்ப அடையாள அட்டையை டிஜிலாக்கரில் அணுகலாம்

இடுகை இடப்பட்ட நாள்: 17 JUN 2026 2:28PM by PIB Chennai

ராஜஸ்தானைச் சேர்ந்த சுமார் 7.5 கோடி பேர் தற்போது தங்களுடைய ஜன் ஆதார் குடும்ப அடையாள அட்டை விவரங்களை டிஜிலாக்கரில் அணுகலாம். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் ஆவண தொகுப்பான  டிஜிலாக்கர்ராஜஸ்தான் அரசால் வழங்கப்படும் இந்த அடையாள ஆவணத்தை தற்போது தனது தளத்தில் இணைத்துள்ளது. இதனால்மக்கள் தங்களுக்குத் தேவைப்படும்போது உடனடியாக இந்த ஆவணத்தைப் பெற்றுப் பயன்படுத்தவோ, பகிரவோ முடியும்.

இந்த இணைப்பு இருவழிச் செயல்பாட்டைக் கொண்டதாகும். மக்கள் தங்களுடைய ஏற்கனவே உள்ள தங்களுடைய குடும்ப அடையாள அட்டை விவரங்களை டிஜிலாக்கரில் சேமிக்கலாம். அதேபோல், டிஜிலாக்கர் ஜன் ஆதார் அமைப்போடு இணைக்கப்பட்டுள்ளதால்புதிய குடும்ப அடையாள அட்டைக்கு டிஜிட்டல் முறையில் பதிவு செய்யவும்அதற்கான ஒப்புதலைச் செயலி மூலமாகவே வழங்கவும் முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273955&reg=3&lang=1   

***

SS/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2274187) வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी