மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
உத்தரப் பிரதேசத்தில் 6 கோடிக்கும் மேற்பட்டவர்கள் உத்தரப்பிரதேச குடும்ப அடையாள அட்டையை டிஜிலாக்கரில் அணுகலாம்
प्रविष्टि तिथि:
17 JUN 2026 2:24PM by PIB Chennai
உத்தரப் பிரதேசத்தில் வசிக்கும் 6 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தற்போது தங்களுடைய உத்தரப் பிரதேச குடும்ப அடையாள அட்டையை டிஜிலாக்கரில் அணுகலாம். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவின் முதன்மை டிஜிட்டல் ஆவண தொகுப்பான டிஜிலாக்கர், உத்தரப் பிரதேச குடும்ப அடையாள அட்டையை இணைத்துள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் தொலைபேசி அல்லது கணினியிலிருந்து எந்த நேரத்திலும் இந்தக் குடும்ப அடையாள அட்டையைப் பெறவும், சேமிக்கவும், பகிரவும் முடியும்.
மக்கள் இனிமேல் அசல் குடும்ப அடையாள அட்டையை எடுத்துச் செல்லவோ அல்லது நகல் எடுக்கவோ தேவையில்லை. டிஜிலாக்கரில் பெறப்படும் நகல், சரிபார்க்கப்பட்ட, சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணமாகும். இதை கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், பிற மாநில நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், பெறவும் உடனடியாகப் பயன்படுத்தலாம். இது விரைவாக, காகிதப் பயன்பாடற்ற, 24 மணி நேரமும் கிடைக்கக்கூடியதாகும்.
உத்தரப் பிரதேச குடும்ப அடையாள அட்டை என்பது உத்தரப் பிரதேசத்தின் முக்கிய குடும்ப அடையாள ஆவணமாகும். இது ஒவ்வொரு குடும்பத்தையும் அதற்கு உரிமையுள்ள நலத்திட்டப் பலன்களுடன் இணைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273952®=3&lang=1
***
SS/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2274174)
आगंतुक पटल : 5