ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புறப் போக்குவரத்து, ரயில்-சாலை வழித்தட இணைப்பை மேம்படுத்துவதற்கான இந்தூரில் ரயில் மேம்பாலத்தை மறுசீரமைக்க இந்திய ரயில்வே ஒப்புதல்

प्रविष्टि तिथि: 17 JUN 2026 1:53PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நகர்ப்புறப் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், ரயில் - சாலை இணைப்பை வலுப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில், இந்தூரில் உள்ள சாஸ்திரியா ரயில்வே மேம்பாலத்தை ரூ 139 கோடி செலவில் மறுசீரமைக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில் வழித்தடங்களில் குறுக்காக அமைந்துள்ள கடவுச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கவும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கும் ஏதுவாக, சாலை மேம்பாலங்கள்,  கீழ்ப்பாலங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைப்பதற்கு,   இந்திய ரயில்வேயின் தற்போதைய திட்டத்தின் கீழ், இத்திட்டத்திற்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், நவீன பொறியியல் நுட்பத்துடன் கூடிய கட்டுமானத்துடன், நான்கு வழிச்சாலை அமைப்பு, மேம்பாலக் கட்டுமானப் பணிகளும் அடங்கும். இந்தப் புதிய மேம்பாலம், அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவையை நிறைவு செய்வதுடன், பயணிகளுக்குச் சுமூகமான, பாதுகாப்பான பயணத்தை வழங்கும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போக்குவரத்து, பராமரிப்புப் பணிகளுக்கான நடைமுறைகளை எளிதாக்க ஏதுவாக, பாலத்தின் இருபுறமும், கீழ்ப்பகுதியில் 6 மீட்டர் அகலமுள்ள சேவை சாலைகள் அமைக்கப்படும்

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273932&reg=3&lang=1

 

***

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2274166) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada