ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடிநீர் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடல்

प्रविष्टि तिथि: 16 JUN 2026 4:44PM by PIB Chennai

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை சார்பில், 9-வது மாவட்ட ஆட்சியர்களுக்கான குடிநீர் குறித்த கலந்துரையாடல் காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அத்துறையின் செயலர் திரு. அசோக் கே.கே. மீனா தலைமை தாங்கினார்.

 

ஜல் ஜீவன் மிஷன் 2.0-ன் கீழ், உள்கட்டமைப்பு உருவாக்கத்தைத் தாண்டி, குடிநீர் விநியோகத்தின் தரம் மற்றும் நிலையான செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று செயலர் வலியுறுத்தினார். மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டங்களை முறையாக நடத்துதல், குடிநீர் சேவை மதிப்பீடு  மூலம் சேவைத் தரத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் நீர் அர்ப்பணிப்பு விழாக்கள் வாயிலாகக் குடிநீர் திட்டங்களை கிராம ஊராட்சிகளிடம் முறையாக ஒப்படைத்தல் போன்ற பணிகளை அவர் சுட்டிக்காட்டினார்.

 

தேசிய ஜல் ஜீவன் மிஷன் கூடுதல் செயலர் திரு. கமல் கிஷோர் சோன், நிலத்தடி நீர் மேலாண்மை, மழை மானிகளின் பயன்பாடு மற்றும் நிதி ஆணையத்தின் மானியங்களைச் சரியாகப் பயன்படுத்தி, கிராமப்புற குடிநீர் விநியோகத்தை வலுப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273591&reg=3&lang=1

செய்தி அடையான எண்: 2273591

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2273781) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी