சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நெடுஞ்சாலைகள் பராமரிப்பை வலுப்படுத்த ‘முன்கூட்டியே கண்டறியும் மேலாண்மை’ முறைக்கு மாறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

प्रविष्टि तिथि: 16 JUN 2026 6:25PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தை மேம்படுத்த, அவற்றின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  புதிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது. வழக்கமான பராமரிப்பு முறைகளுக்குப் பதிலாக, ‘முன்கூட்டியே கண்டறியும் சொத்து நிர்வாகம்’ என்ற நவீன தொழில்நுட்பத்தை ஆணையம் அறிமுகப்படுத்துகிறது. சாலைகளில் ஏற்படும் சேதங்களை அவை பெரிய பாதிப்பாக மாறுவதற்கு முன்பே கண்டறிந்து, உடனுக்குடன் சரிசெய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த புதிய முறை மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டது. முதலாவதாக, அதிநவீன ஆய்வு வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் சாலைகளின் தரம், பள்ளங்கள், சேதமடைந்த தடுப்புகள் மற்றும் வடிகால் வசதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. இரண்டாவதாக, இவ்வாறு சேகரிக்கப்படும் அனைத்து விவரங்களும் ஒரு மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இது சாலைகளின் தற்போதைய நிலையைத் துல்லியமாக அறிய உதவுகிறது.

இந்தத் தொழில்நுட்பம் மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறை மூலம், சாலைகளின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படுவதுடன், நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பான பயண அனுபவம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273661&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2273661

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2273778) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu