தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோரக்பூர் மற்றும் லக்னோ - கோரக்பூர் ரயில் பாதை நெடுகிலும் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் மதிப்பீடு செய்தது

प्रविष्टि तिथि: 16 JUN 2026 3:06PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), பொது தொலைத்தொடர்புப் பயன்பாட்டாளரின் தகவலுக்காக, மே 2026 -ல், கோரக்பூர் மற்றும் லக்னோ - கோரக்பூர் ரயில் பாதை முழுவதும் நடத்தப்பட்ட நேரடிச் சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த நேரடிச் சோதனையின் நோக்கம், தொலைத்தொடர்பு சேவை வழங்குநரால் அளிக்கப்படும் மொபைல் நெட்வொர்க் சேவைகளின் (குரல் மற்றும் தரவு) நிகழ்நேரத் தரத்தை மதிப்பிட்டு சரிபார்ப்பதாகும். இந்த சுதந்திரமான நேரடிச் சோதனையின் போது, தொடர்புத் தன்மை, அழைப்புத் துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பு வெற்றி விகிதம் , தரவு பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற செயல்திறன் போன்ற முக்கிய சேவைகளில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரின் செயல்திறனை டிராய் பதிவு செய்கிறது. பின்னர் இந்த முடிவுகள், பயன்பாட்டாளருக்குத் தெரிவிக்கவும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் தங்கள் சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும் வெளியிடப்படுகின்றன.

இந்த சுதந்திரமான சோதனைகள், நகரங்கள், வைஃபை போன்றவை அதிகம் பயன்படும் இடங்கள், பொதுப் போக்குவரத்து மையங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டுச் சூழல்களில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் கள மொபைல் நெட்வொர்க் செயல்திறனைப் பதிவு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் சிம் கார்டுகளைப் பயன்படுத்தி 2ஜி , 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகள் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273541&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2273710) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी