மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

இந்திய வனப்பணி 2026 (முதல்நிலை) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 16 JUN 2026 10:01AM by PIB Chennai

மத்திய குடிமைப்பணியாளர் தேர்வாணையம் இந்திய வனப்பணி 2026 முதல் நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.  இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் பிரதான தேர்வை எழுத தகுதி பெற்றுள்ளனர்.

பிரதான தேர்வை எழுத விரும்புவோர் தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

தேர்வு எழுதுவோர் இது குறித்த விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் சமர்ப்பிப்பதற்கான தகவல் விரைவில் அறிவிக்கப்படும். இந்திய வனப்பணி தேர்வு 2026, குடிமைப்பணித் தேர்வு 2026-ன் முழு நடைமுறை நிறைவடைந்த பிறகு தேர்வாணையத்தின் https://upsc.gov.in என்ற இணையதளத்தில் இந்திய வனப்பணி, முதல்நிலை தேர்வின் மதிப்பெண்கள், கட் ஆஃப் மதிப்பெண்கள், விடைக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்படும்.

80  காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்திய வனப்பணி தேர்வு 2026-ல் 1,046 பேர் பிரதான தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களை தேர்வாணையத்தின் 011-40303444 / 24041001 என்ற  தொலைபேசி மூலம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை விளக்கம் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273345&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2273523) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati