பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாவித்ரிபாய் பூலே தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை மத்திய அமைச்சர்கள் ஆய்வு

प्रविष्टि तिथि: 15 JUN 2026 6:24PM by PIB Chennai

மத்திய  பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தலைமையிலும், இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூரின் முன்னிலையிலும், இந்தூரில் உள்ள சாவித்ரிபாய் பூலே தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் (SPNIWCD) மேற்கு மண்டல மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சித் திட்டங்களின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான பணிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக திருமதி அன்னபூர்ணா தேவி தெரிவித்தார். சக்ஷம் அங்கன்வாடி, ஊட்டச்சத்து  2.0, சக்தி இயக்கம் மற்றும் வாத்சல்யா இயக்கம் முதலிய முக்கியத் திட்டங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் முழுமையான மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் கூறினார். சாவித்ரிபாய் பூலே தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் குழந்தைகள் வழிகாட்டுதல் மையம் (CGC) மூலம் வழங்கப்படும் சேவைகள் குறித்து பரவலான விளம்பரமும் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273158&reg=3&lang=1

(Release ID: 2273158)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2273304) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी