மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
பயோமெட்ரிக் மேம்பாடு தொடர்பான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரங்களை தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்தது
இடுகை இடப்பட்ட நாள்:
15 JUN 2026 7:05PM by PIB Chennai
இந்திய தனித்துவ அடையாள ஆணையமன யுஐடிஏஐ (UIDAI), ஹைதராபாத் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ஐஐஐடி ஹைதராபாத்) இணைந்து, முகம், கருவிழி மாதிரிகளுக்கான அதன் பயோமெட்ரிக் எஸ்டிகே அளவீட்டு போட்டியின் வெற்றியாளர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளது.
கைரேகை போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து, யுஐடிஏஐ டிசம்பர் 2025 முதல் பிப்ரவரி 2026 வரை முகம், கருவிழி வயது மாறுபாடு போட்டிகளை நடத்தியது. இந்த முகம், கருவிழி சவால் போட்டிகளுக்கு மொத்தம் 531 பதிவுகள் கிடைத்தன.
பல்வேறு விரிவான செயல்திறன் சோதனைகளைத் தொடர்ந்து, முகப் போட்டி சவாலில் ஸ்லோவாக்கியாவின் இன்னோவாட்ரிக்ஸ் முதலிடத்தைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஐடிபயோ, லித்துவேனியாவின் நியூரோடெக்னாலஜி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. இதேபோல், கருவிழிப் போட்டி சவாலில், ஐடிபயோ முதலிடத்தைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து நியூரோடெக்னாலஜி, இன்னோவாட்ரிக்ஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
இப்போட்டியில் பெர்ஃபியோஸ், ஐஐஐடி ஹைதராபாத் உள்ளிட்ட பல இந்திய நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் பங்கேற்றன.
இந்த முன்முயற்சி, உள்நாட்டு பயோமெட்ரிக் மென்பொருள் மேம்பாட்டு கருவி தீர்வுகளை உருவாக்குவதற்கும் பயோமெட்ரிக் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும் யுஐடிஏஐ மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இது தொடர்பான மேலும் விவரங்கள் பின்வரும் இணையதளத்தில் உள்ளன: https://biochallenge.uidai.gov.in
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273181®=3&lang=1
(Release ID : 2273181)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2273293)
வருகையாளர் எண்ணிக்கை : 63