வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-23-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட புதிய மொத்த விலைக் குறியீடு, உற்பத்தியாளர் விலைக் குறியீடுகள் தொடர்பான தகவல்கள்

प्रविष्टि तिथि: 15 JUN 2026 12:00PM by PIB Chennai

தொழில், உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையான டிபிஐஐடி-யின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம், 2022-23-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட திருத்தப்பட்ட மொத்த விலைக் குறியீட்டுத் தொடரை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய தொடரானது, 2011-12-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட மொத்த விலைக் குறியீட்டுத் தொடருக்குப் பதிலாக அமலுக்கு வரும். மேலும், அதே அடிப்படை ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, வங்கி, பங்குப் பரிவர்த்தனை, காப்பீடு, ஓய்வூதிய நிதி மேலாண்மை, ரயில்வே, விமானப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகிய ஏழு சேவைகளுக்கான வெளியீட்டு உற்பத்தியாளர் விலைக் குறியீடு, சோதனை உள்ளீட்டு உற்பத்தியாளர் விலைக் குறியீடு, சேவை உற்பத்தியாளர் விலைக் குறியீடு ஆகியவற்றின் புதிய தொடர்களையும் அந்த அலுவலகம் வெளியிட்டுள்ளது.

விலை உயர்வு நிபந்தனைகளில் மொத்த விலைக் குறியீட்டின் பரவலான பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தக் குறியீடு, உற்பத்தி விலைக் குறியீட்டுடன் சேர்த்து, வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு வெளியிடப்பட்டு, அதன் பிறகு நிறுத்தப்படும். இது, பயனர்கள் மொத்த விலைக் குறியீட்டிலிருந்து உற்பத்தியாளர் விலைக் குறியீடுகளுக்கு மாறுவதற்குப் போதுமான கால அவகாசத்தை வழங்கும். இந்த நடவடிக்கை, வளர்ந்த பொருளாதாரங்களால் பின்பற்றப்படும் உலகளாவிய சிறந்த நடைமுறைகள், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப அமைந்துள்ளது. உற்பத்தியாளர் விலைக் குறியீடு, ஒரு தொழில்துறையில் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளுடன் ஒப்பிடுகையில், உற்பத்தி செய்யப்படும் பொருளின் விலைகளைப் பற்றி ஒரு சிறந்த புரிதலை அளிக்கிறது. மேலும், உள்ளீடுகளில் உற்பத்தியாளர்கள் அனுபவிக்கும் பணவீக்கம், உற்பத்தி செய்யப்படும் வெளியீட்டிற்கு எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறது என்பதையும் இது விளக்குகிறது.

நிர்வாக மூலங்கள்/முகமைகளிடமிருந்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், முதல் கட்டத்தில் ஏழு சேவைகளுக்கான சேவை செயல்திறன் குறியீடுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

மாதாந்திர அடிப்படையில் தொகுக்கப்படும் மொத்த விலைக் குறியீடு, வெளியீட்டு உற்பத்தியாளர் விலைக் குறியீடு ஆகியவை, மே 2026 மாதத்திற்கான தற்காலிக மதிப்பீடுகளாக வெளியிடப்படுகின்றன. இந்தக் குறியீடுகளின் முந்தைய தரவுகள், பொருளாதார ஆலோசகர் அலுவலகத்தின் இணையதளத்தில் ( https://eaindustry.nic.in/download_data_2223.asp) என்ற இணைப்பில் உள்ளன. மாதாந்திர சோதனை உள்ளீட்டு உற்பத்தியாளர் விலைக் குறியீடு (உற்பத்தித் துறைக்கு மட்டும்) மார்ச் 2026 முதல் சோதனை அடிப்படையில் வெளியிடப்படுகிறது. சோதனை உள்ளீட்டு உற்பத்தியாளர் விலைக் குறியீட்டின் வெளியீடு, தரவுகளின் தரத்தை ஆய்வு செய்யவும், பயனர்களின் கருத்துக்களைப் பெறவும் துறைக்கு உதவும்.

காலாண்டு அடிப்படையில் தொகுக்கப்படும் சேவைத் துறை உற்பத்தியாளர் விலைக் குறியீடுகள், 2025-26-ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டிற்காக (தற்காலிகம்) வெளியிடப்படுகின்றன. முந்தைய சேவைத் துறை உற்பத்தியாளர் விலைக் குறியீடுகளின் தொகுப்பு, பொருளாதார ஆலோசகர் அலுவலகத்தின் இணையத் தளத்தில் (https://eaindustry.nic.in/download_data_2223.asp) என்ற இணைப்பில் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272872&reg=3&lang=1

 

***

Release ID : 2272872

SS/PLM/KR

 


(रिलीज़ आईडी: 2273042) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Bengali-TR , English , Urdu , हिन्दी