சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயர்தர கல்வித் திட்டத்தின் மூலம் தகுதியுடைய எஸ்சி சமூகத்தினர் பயனடைகின்றனர் – மத்திய அரசு

प्रविष्टि तिथि: 15 JUN 2026 12:58PM by PIB Chennai

மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம், கல்வி, வாய்ப்புகள் மூலம் விளிம்புநிலை சமூகத்தினருக்கு அதிகாரம் அளித்து அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.

நாடு முழுவதும் எஸ்சி மாணவர்களுக்கான உயர்தரக் கல்வித் திட்டம் மூலம், திறமையான இளம் மாணவர்கள் தங்களுடைய இலக்குகளை சாதனைகளாக மாற்றி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் வரையுள்ள தகுதியுடைய மாணவர்கள் நாட்டின் முக்கிய முன்னணி கல்வி நிறுவனங்களில் தரமான உயர்கல்வியைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

இத்திட்டம் 2007–08-ல் தொடங்கப்பட்டபோது பயன்பெற்ற மாணவர்களின் எண்ணிக்க 195-ஆக இருந்த நிலையில், 2025–26-ல் அதன் எண்ணிக்கை 4,742-ஆக அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில் ஆண்டு செலவினம் ரூ.2.17 கோடியில் இருந்து ரூ.117.19 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272891&reg=3&lang=1

***

SS/IR/LDN/KR

 


(रिलीज़ आईडी: 2273036) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada