விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் கூட்டம்: உலகளாவிய வேளாண் ஒத்துழைப்புக்கான ‘பிரிக்ஸ் இந்தூர் பிரகடனம்’ஏற்றுக்கொள்ளப்பட்டது

प्रविष्टि तिथि: 13 JUN 2026 7:47PM by PIB Chennai

 இந்தூரில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அளவிலான கூட்டங்கள் இன்று நிறைவடைந்தன. உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் விவசாயம், வேளாண் வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் விவசாயம் ஆகியவற்றிற்குப் புதிய திசையைக் காட்டும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை உள்ளடக்கிய 'இந்தூர் பிரகடனம்' இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உலகளாவிய நெருக்கடிகள் மற்றும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், இந்தக் கூட்டம், உலகம் முழுமைக்கும் நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு வலுவான செய்தியை வழங்கியுள்ளதாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். வேளாண் துறையில் உள்ள பொதுவான சவால்களை எதிர்கொள்ளவும், அனைத்து இடங்களிலும் உள்ள விவசாயிகளுக்குப் பயனளிக்கும் தீர்வுகளை உருவாக்கவும் நாடுகள் எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதை இந்தக் கூட்டம் எடுத்துக்காட்டியது.

உறுப்பு மற்றும் கூட்டாளர் நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்பட மொத்தம் 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக அமைச்சர் குறிப்பிட்டார். இது வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு விவகாரங்களில் பிரிக்ஸ் நாடுகளிடையே உள்ள ஆழமான பிணைப்பையும் தீவிரமான ஈடுபாட்டையும் தெளிவாகக் காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2272544&reg=3&lang=1    

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2272805) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati