PIB Backgrounder
azadi ka amrit mahotsav

உலக காற்று தினம் - 100 ஜிகாவாட்டைத் தாண்டிய இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணம்

प्रविष्टि तिथि: 14 JUN 2026 1:05PM by PIB Chennai

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் காற்றாலை மின்சக்தியின் பங்கை ஊக்குவிப்பதற்காக, உலகக் காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15 அன்று கொண்டாடப்படுகிறது. "காற்றாலை ஆற்றல்: லட்சியத்திலிருந்து வேகம் வரை" என்ற கருப்பொருளின் கீழ், 2026-ம் ஆண்டு உலகக் காற்று தின மாநாட்டை இந்தியா, 2026 ஜூன் 15 அன்று கோவாவில் நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய மின்சார ஆணையம், இந்திய சூரிய மின்சக்திக் கழகம், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, தேசிய காற்றாலை மின்சக்தி நிறுவனம், கிரிட் இந்தியா, மாநில அரசுகள், தொழில் அமைப்புகள் மற்றும் சங்கங்களின் மூத்த பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

மின்கட்டமைப்புத் தயார்நிலை, திறன் அதிகரிப்பு, உள்நாட்டு உற்பத்திப் போட்டித்திறன், முன்கணிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உறுதிப்படுத்தலில் உள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட, இந்தியாவின் காற்றாலை எரிசக்திப் பயணத்தின் அடுத்த கட்டத்தை வடிவமைக்கும் முக்கிய முன்னுரிமைகளை இந்த மாநாடு முன்னிலைப்படுத்தும். " உலகளாவிய சந்தைகளுக்காக இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தியை உயர்த்துதல்" என்ற தொழில்துறை அறிக்கையும் இந்த மாநாட்டில் வெளியிடப்படும்.

 இந்தியாவின் காற்றாலை மின்சக்தித் துறை சீராக விரிவடைந்து வருகிறது. இத்துறைக்கு உள்நாட்டு உற்பத்தியும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதில் அதன் பங்கும் பெருகிய முறையில் ஆதரவளிக்கின்றன.

இந்தியாவின் மதிப்பிடப்பட்ட மொத்த காற்றாலை மின் உற்பத்தித் திறன், தரை மட்டத்திலிருந்து 120 மீட்டர் உயரத்தில் 695.5 ஜிகாவாட்டாகவும் , 150 மீட்டர் உயரத்தில் 1,163.9 ஜிகாவாட்டாகவும் உள்ளது.

150 மீட்டர் அலைவரிசையில் மதிப்பிடப்பட்ட காற்றாலை மின் உற்பத்தித் திறனில் பெரும்பகுதி, அதிக வளம் கொண்ட எட்டு மாநிலங்களில் குவிந்துள்ளது:

ராஜஸ்தான்: 284.2 ஜிகாவாட்;

குஜராத்: 180.8 ஜிகாவாட்;

மகாராஷ்டிரா : 173.9 ஜிகாவாட்;

கர்நாடகா: 169.3 ஜிகாவாட்;

ஆந்திரப் பிரதேசம் : 123.3 ஜிகாவாட்;

தமிழ்நாடு: 95.1 ஜிகாவாட்;

மத்தியப் பிரதேசம்: 55.4 ஜிகாவாட்,

தெலங்கானா: 54.7 ஜிகாவாட்.

காற்று வளங்களை வரைபடமாக்குவதற்கும், காற்றாலை ஆற்றல் மேம்பாட்டிற்கான அதிக ஆற்றல் வாய்ந்த இடங்களைக் கண்டறிவதற்கும், நாடு முழுவதும் 900-க்கும் மேற்பட்ட காற்று கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்தியாவின் பரந்த காற்றாலை வளம், 2030-ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் காற்றாலைத் திறனையும் , 2036-ம் ஆண்டிற்குள் 156 ஜிகாவாட் திறனையும் அடைவதற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.

நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தித் திறனில் இந்தியா உலக அளவில் 4வது இடத்தில் உள்ளது.

நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தித் திறன், மார்ச் 2014-ல் 21.04 ஜிகாவாட்டிலிருந்து மார்ச் 2026-ல் 56.09 ஜிகாவாட்டாக, 2.66 மடங்கு அதிகரித்துள்ளது.

கூடுதலாக 28 ஜிகாவாட் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காற்றாலை மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 45%, அதிகபட்ச தேவை நேரங்களில் நடைபெறுகிறது . இது சூரிய ஆற்றலுக்குத் துணையாக இருப்பதுடன், மின்கட்டமைப்பின் நம்பகத்தன்மையையும் வலுப்படுத்துகிறது.

காற்றாலை உற்பத்தித் திறன் 2014-ல் 10 ஜிகாவாட்டிலிருந்து, மார்ச் 2026 நிலவரப்படி சுமார் 24 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது.

காற்றாலை மின்சக்தி, இந்தியாவின் மின்சார அமைப்பில் நிலையான, ஒருங்கிணைந்த ஒரு அங்கமாக மாறி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272630&reg=48&lang=1

 

***

(Release ID: 2272630)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2272743) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati