மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போஜ்பூரில் ஒருங்கிணைந்த நீர்வாழ் பூங்கா - மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், பீகார் முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி ஆகியோர் நாளை அடிக்கல் நாட்டுகின்றனர்

प्रविष्टि तिथि: 14 JUN 2026 4:52PM by PIB Chennai

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், பீகார் முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி ஆகியோர் இணைந்து, 31.21 கோடி மொத்த முதலீட்டில் போஜ்பூரில் அமையவிருக்கும் ஒருங்கிணைந்த நீர்வாழ் பூங்காவிற்கு நாளை (15 ஜூன் 2026) அடிக்கல் நாட்டுகின்றனர். அத்துடன் பீகாரின் பாட்னாவில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் மண்டல மையத்தை அவர்கள் திறந்து வைப்பார்கள்.

இந்த முன்முயற்சிகள், நவீன தொழில்நுட்பங்கள், அறிவியல் பூர்வமான வள மேலாண்மை, வேலைவாய்ப்பு உருவாக்கம், மதிப்புக்கூட்டல் ஆகியவற்றின் மூலம் பீகாரின் மீன்வளச் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதையும், ஏற்றுமதியை நோக்கிய மீன்வளத்துக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

பீகார், 1.22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுள்ள குளங்கள், குட்டைகள், 0.64 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுள்ள நீர்த்தேக்கங்கள், 9.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுள்ள வெள்ளச் சமவெளி ஏரிகள், தேங்கிய நீர்நிலைகள், 21,354 கிலோ மீட்டருக்கும் அதிகமான ஆறுகள், கால்வாய்கள் உட்பட, பரந்த, பல்வகைப்பட்ட உள்நாட்டு நீர் வளங்களைக் கொண்டுள்ளது.

இங்கு வளர்க்கப்படும் முக்கிய மீன் இனங்களில் கட்லா, ரோகு, மிருகால், கிராஸ் கார்ப், காமன் கார்ப், சில்வர் கார்ப், பப்டா, திலாப்பியா, பாங்காசியஸ், மாகூர் (கெளுத்தி மீன்), ஸ்காம்பி, அலங்கார மீன்கள் ஆகியவை அடங்கும். இந்த வளமான ஆதாரமானது, பீகாரை ஒரு மீன்வள மையமாக மாற்றுவதற்கான குறிப்பிடத்தக்க ஆற்றலை அளிக்கிறது.

மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் பீகாருக்காக 902.84 கோடி மதிப்பிலான மீன்வளத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒருங்கிணைந்த நீர்வாழ் பூங்காவும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் மண்டல மையமும் இணைந்து, உற்பத்தித்திறன், வருமானம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரிக்கும் உருவாக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272665&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2272701) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी