குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கயாவில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்பான தொழில்நுட்ப மையம் - மத்திய அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி, பீகார் முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி இணைந்து அடிக்கல் நாட்டவுள்ளனர்

प्रविष्टि तिथि: 14 JUN 2026 11:10AM by PIB Chennai

மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மன்ஜியும், பீகார் முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரியும், இணைந்து பீகார் மாநிலம் கயாவில் உள்ள கிஸர்சராய் என்ற இடத்தில் அமையவிருக்கும் தொழில்நுட்ப மையத்திற்கு 2026 ஜூன் 15 அன்று அடிக்கல் நாட்டுவார்கள். இவ்விழாவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) அமைச்சக அதிகாரிகள், பீகார் அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

சிறந்த சூழலை வளர்ப்பதற்கும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் போட்டித்திறனை மேம்படுத்துவதற்கும், எம்எஸ்எம்இ அமைச்சகம் நாடு தழுவிய தொழில்நுட்ப மையங்கள், விரிவாக்க மையங்களின் கட்டமைப்பை விரிவுபடுத்துகிறது. பல ஆண்டுகளாக, இந்த மையங்கள் உள்நாட்டுத் திறன்களை வளர்ப்பதிலும், தற்சார்பை முன்னெடுத்துச் செல்வதிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. எம்எஸ்எம்இ-களுக்கு ஆதரவளிப்பதைத் தாண்டி, இவை தொழில்நுட்பத் தன்னிறைவு , நிலையான தொழில்துறை வளர்ச்சி ஆகிய தேசிய இலக்குகளை முன்னெடுத்துச் செல்கின்றன.

கயாவில் உள்ள கிஸர்சராய் என்ற இடத்தில், 170 கோடி மொத்த முதலீட்டில் கயா தொழில்நுட்ப மையம் நிறுவப்படும். இதில் கட்டுமானப் பணிகளுக்காக சுமார் 86 கோடியும், ஆலை, இயந்திரங்களுக்கு 84 கோடியும் அடங்கும்.

மாநில அரசால் வழங்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தில், உற்பத்திப் பிரிவு, பயிற்சிப் பிரிவு, பயன்பாட்டுப் பிரிவு, நிர்வாகப் பிரிவு, பல்நோக்கு அரங்கம், தங்கும் விடுதி, பணியாளர் குடியிருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் சுமார் 16,800 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த மையம் உருவாக்கப்படும்.

இந்த மையம், பொதுப் பொறியியல், கனரகப் பொறியியல், ஜவுளிப் பரிசோதனை ஆகிய முக்கியத் துறைகளுக்குச் சேவையாற்றி, இவற்றில் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272619&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2272637) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी