தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கான ஒரு நாள் மாநாட்டை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தியது

प्रविष्टि तिथि: 12 JUN 2026 9:02PM by PIB Chennai

ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கான ஒரு நாள் மாநாட்டை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தியது. இதில் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரிகள், சமூக ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியின் மூன்றாம் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் மாநிலங்கள், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைச் சேர்ந்த மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரிகள் / மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரிகள், சமூக ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரிகள், மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரிகள் / மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரிகள்உட்பட 350-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் இந்த மாநாட்டில் உரையாற்றினர்.

அண்மையில், ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, முன்னெப்போதும் இல்லாத அளவில் மக்கள் பங்கேற்பு இருந்ததாக தலைமைத் தேர்தல் ஆணையர்  திரு. ஞானேஷ் குமார் கூறினார். அதிகாரிகள் மேற்கொள்ளும் தகவல் தொடர்பு என்பது சரியான நேரத்தில், எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், உண்மைகள், சட்டத்தின் அடிப்படையில் அமைந்ததாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272344&reg=3&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2272522) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Gujarati , Malayalam