குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 'காதி இந்தியா' நிறுவனம் 'ஸ்வதா' எனும் ஆரோக்கியம் சார்ந்த ஆடைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

प्रविष्टि तिथि: 12 JUN 2026 10:02PM by PIB Chennai

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், காதி, கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு. மனோஜ் கோயல், 'ஸ்வதா' என்ற சிறப்பு ஆரோக்கிய ஆடைத் தொகுப்பை  அறிமுகப்படுத்தினார். காதிக்கான சிறப்பு மையத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ஆடைத் தொகுப்பு, யோகா, ஆரோக்கியம், சமச்சீர்  வாழ்க்கை முறை ஆகிய இந்தியக் கோட்பாடுகளை நவீன ஆடை வடிவமைப்புகளுடன் இணைக்கும் ஒரு புதுமையான முயற்சியாகும். புது தில்லியில், ஹவுஸ் காஸ் பகுதியில் உள்ள தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கழக வளாகத்தில், காதி, கிராமத் தொழில்கள் ஆணையத்துடன் இணைந்து காதிக்கான சிறப்பு மையத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த அறிமுக விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய காதி, கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு. மனோஜ் கோயல், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் முன்மொழிவின் பேரில் 2014-ல் நா பொதுச் சபையால் அறிவிக்கப்பட்ட சர்வதேச யோகா தினம், ஆண்டுதோறும், ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். உடல், மனம்ஆன்மா ஆகியவற்றிற்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் முழுமையான ஆரோக்கியம், நல்வாழ்வை ஊக்குவிக்கும் பண்டைய இந்திய யோகா பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் இத்தினம் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272362&reg=48&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2272520) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Malayalam