சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பேச்சு, செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கன நிறுவனத்தில், தொலைபேசிவழி மறுவாழ்வு, குரல் பதிவு அறை போன்ற வசதிகள் தொடக்கம்

प्रविष्टि तिथि: 12 JUN 2026 9:58PM by PIB Chennai

தேசிய பேச்சு, செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கன நிறுவனத்தில், தொலைபேசிவழி மறுவாழ்வு, குரல் பதிவு அறை போன்ற வசதிகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் இணைச் செயலாளர் திரு. கிரிஷ் சி. ஹோசூர் தொடங்கி வைத்தார்.

மும்பையில் உள்ள அலி யாவர் ஜங் தேசிய பேச்சு, செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனத்தின் செயல்பாடுகளைப்  பார்வையிட்ட அவர், முக்கிய வசதிகள், சேவைகளை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவன வளாகத்தில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறுவனத்தின் துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள், சேவைகள், எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து இணைச் செயலாளரிடம் விளக்கினர். பேச்சு, மொழி மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு அதிகாரமளிப்பதிலும், சமூகத்திற்குச் சேவைகளை வழங்குவதிலும், ஒவ்வொரு துறையின் பங்களிப்பு குறித்தும் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272361&reg=48&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2272518) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi