மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 13 JUN 2026 3:09PM by PIB Chennai

மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்காக, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து மத்திய பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கான அறிவிப்பு ஜூன் 13-ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான விளம்பரம் (எண். 06/2026) மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள் ஆகியவை, தேர்வாணையத்தின் இணையதளத்தில் (https://upsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், 2026 ஜூன் 13 முதல் ஜூலை 3-ம் தேதி வரை, https://upsconline.nic.in/ora/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

***

(Release ID: 2272453)

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2272500) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati