வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவின் தோல் மற்றும் காலணித் துறையை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
12 JUN 2026 7:33PM by PIB Chennai
இந்தியாவின் தோல் மற்றும் காலணித் துறையில் தரம், சோதனை, அங்கீகாரம் மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்த, இந்திய தரக் கவுன்சில் மற்றும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஆக்ரா, சென்னை, ராணிப்பேட்டை, கான்பூர் போன்ற முக்கிய காலணி மையங்களில் திறன் மேம்பாடு, தரச் சான்றிதழ் மற்றும் சோதனை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்குத் தேவையான பயிற்சித் திட்டங்கள் உருவாக்கப்படும்.
குறிப்பாக, முறையான கல்வித்தகுதி இல்லாத அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களுக்கு, அவர்களின் திறனை அங்கீகரிக்கும் ‘முந்தைய கற்றல் அங்கீகாரம்’ திட்டம் செயல்படுத்தப்படும். இந்திய தரக்கவுன்சில் தொழில்நுட்ப வழிகாட்டுதலையும், இந்திய தரக் கவுன்சில் மற்றும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவன களப்பயிற்சி மற்றும் ஆய்வக மேம்பாட்டையும் முன்னெடுக்கும். இந்த முயற்சி, இந்திய காலணி உற்பத்தித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தி, சர்வதேச அளவில் போட்டித்தன்மை கொண்டதாக மாற்ற உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272310®=3&lang=1
***
TV/VK//RJ
(रिलीज़ आईडी: 2272433)
आगंतुक पटल : 7