நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடுகளிடையேயான மோதல்கள் காரணமாக வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

प्रविष्टि तिथि: 11 JUN 2026 11:01PM by PIB Chennai

நாடுகளிடையேயான மோதல்கள் மற்றும் நிச்சயமற்ற சூழல் காரணமாக உலகின் தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளின் முன்னேற்றம் பாதிப்புக்குள்ளாவதாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித:துள்ளார்.

வளர்ச்சிக்கான உலகளாவிய ஒருங்கிணைப்புக் குறித்த உச்சிமாநாட்டில் காணாலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். உலக அளவில் சீரான பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வது குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரோன் தலைமையில் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில் ஜி7 உறுப்பு நாடுகள், இந்தியா, பிரேசில், சீனா, கென்யா, தென்கொரியா ஆகிய நாடுகள் பங்கேற்றன. மேலும் இந்த மாநாட்டில் சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்தியா சார்பில் உரையாற்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், வளர்ச்சியை உள்ளடக்கிய பல்முனை  ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271939&reg=48&lang=1   

***

TV/SV/KPG/RJ


(रिलीज़ आईडी: 2272254) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी