வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

13-வது பிரிக்ஸ் நகர்ப்புறமயமாதல் மாநாடு: புதுதில்லியில் தொடக்கம்

प्रविष्टि तिथि: 11 JUN 2026 6:19PM by PIB Chennai

இந்தியாவின் தலைமையில் 13-வது பிரிக்ஸ் நகர்ப்புற மாநாடு புது தில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு. மனோகர் லால் இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

இந்த இரண்டு நாள் மாநாட்டை இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நடத்துகிறது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தோனேசியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு வல்லுநர்கள் பங்கேற்று, முக்கியமான நகர்ப்புற வளர்ச்சி முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கின்றனர்.

இந்தியா பிரிக்ஸ் நகர்ப்புற மாநாட்டை நடத்துவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு 2013-ல் புதுதில்லியிலும், 2016-ல் விசாகப்பட்டினத்திலும், 2021-ல் காணொலி வாயிலாகவும் மாநாடுகள் நடைபெற்றன.

 

"மக்களுக்கான நகரங்கள்: அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மீள்திறன் கொண்ட நகர்ப்புற எதிர்காலத்திற்கான பிரிக்ஸ் ஒத்துழைப்பு" என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் திரு. மனோகர் லால், "உலகளாவிய வளர்ச்சி உரையாடலில் நகர்ப்புற செயல்திட்டத்தை இன்னும் உறுதியாகக் கொண்டு வருவதற்கு இந்த மாநாடு ஒரு சிறந்த வாய்ப்பாகும். அனைவரையும் உள்ளடக்கிய நகர்ப்புற வளர்ச்சி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்பு, நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் ஆகியவையே இந்தியாவின் வளர்ச்சிப் பாதையின் தூண்களாக உள்ளன" என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271765&reg=3&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2272252) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam