அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சூப்பர்நோவா பரிணாம வளர்ச்சிக் குறித்த ஆய்வுகள் அண்டத்தின் ஒரு பகுதியின் தொலைவை அளவிட உதவும்
प्रविष्टि तिथि:
12 JUN 2026 3:39PM by PIB Chennai
பூமியிலிருந்து 90.7 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள என்ஜிசி 2139 என்ற சுருள் விண்மீன் மண்டலத்தில் கண்டறியப்பட்டுள்ள சூப்பர்நோவாவின் பரிணாம வளர்ச்சிக் குறித்த ஆய்வுகள் அண்டத்தின் ஒரு பகுதியின் தொலைவை மதிப்பிட உதவிடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
வான்வெளியில் நிகழும் வெடிப்புகளில் ஒன்றான கோர் கொலாப்ஸ் என்பது சூப்பர்நோவா எனப்படும் மையப்பகுதியைக் குறிப்பதாகும். பெரிய அளவிலான விண்மீன் தனது அணுக்கரு எரிபொருளை முழுமையாகப் பயன்படுத்திய பிறகு ஈர்ப்பு விசைக்குப் பதிலாக தகவமைத்துக் கொள்ள முடியாமல் போகும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. சூப்பர்நோவா பிரகாசமான விண்மீன் மட்டுமின்றி அண்டத்தின் பரிணாம வளர்ச்சிக் குறித்த ஆய்வுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவை மாபெரும் மறுசுழற்சி மையங்களாக செயல்பட்டு எடை அதிகம் கொண்ட கனிமங்களை உருவாக்கி விண்வெளியில் பரப்புகின்றன. இத்தகைய கனிமங்கள் பிற்காலத்தில் விண்மீனாகவும் கோள்கள் மற்றும் உயிரினங்கள் உருவாவதற்கான அடிப்படைக் கூறுகளாகவும் அமைகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272106®=48&lang=1
***
TV/SV/KPG/RJ
(रिलीज़ आईडी: 2272227)
आगंतुक पटल : 7