மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு – மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

प्रविष्टि तिथि: 09 JUN 2026 9:46PM by PIB Chennai

நாடாளுமன்றம், சட்டமன்ற நடவடிக்கைகளில் அவ்வப்போது ஏற்படும் இடையூறுகளும், தடங்கல்களும் ஜனநாயகத்திற்கு ஒரு பெரும் சவாலாக உள்ளதென்று மக்களவைத்தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். ஹரியானாவில் காமன்வெல்த் நாடாளுமன்ற  அமைப்பின் 2-வது மாநாட்டில் (வடக்கு மண்டலம்) உரையாற்றிய அவர், பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப சுமூகமான உரையாடல், விவாதங்களை ஊக்குவிப்பதன் மூலம் இது போன்ற சிக்கல்களுக்கான தீர்வு அவையிலேயே காணலாம் என்று அவர் தெரிவித்தார். மக்களின் நம்பிக்கையை   வலுப்படுத்துவதே தற்போதைய சூழலில் மக்கள் பிரதிநிதிகளின் முக்கியமான பொறுப்பு என்று அவர் கூறினார். சமூகத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் ஒருவரின் நலனையும் உறுதி செய்யும் வகையில், அவை நடவடிக்கைகளில் தங்களுடைய நடத்தை முன்மாதிரியாக அமைவதை உறுதி செய்யுமாறு மக்கள் பிரதிநிதிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

மாநாட்டில் பேசுகையில், மக்கள்  தங்களைத் தேர்ந்தெடுத்து அவைக்கு அனுப்பியுள்ளதாகவும் அதனால் தங்களுடைய நடத்தை சமூகத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் திரு பிர்லா கூறினார். இக்கருத்துகளை ஏற்று தங்கள் மாநிலங்களில் அனைத்து மக்கள் பிரதிநிதிகள் செயல்படுவார்கள் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த இரண்டு நாள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு பிர்லா, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் தங்களுடைய அனுபவங்கள், கண்ணோட்டங்கள், புதிய கருத்துகள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டதாகக் குறிப்பிட்டார். சட்டமியற்றும் அவைகளை மேலும் திறம்பட செயல்படக்கூடியதாகவும் பொறுப்புமிக்கதாகவும், மக்கள் நலனை மையமாகக் கொண்டதாகவும் மாற்றும் நோக்கத்துடன் நான்கு முக்கிய தீர்மானங்களுடன் இம்மாநாடு நிறைவடைந்ததாக திரு ஓம் பிர்லா குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270941&reg=3&lang=1

***

SS/IR/KPG/RJ


(रिलीज़ आईडी: 2272192) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi