சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களின் தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
02 JUN 2026 10:20PM by PIB Chennai
ஊடகம், சமூக வலைதளம் ஆகியவற்றில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மிசோரமில் 1,489 கிலோ மீட்டர் தொலைவிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், மணிப்பூரில் 1,759 கிலோ மீட்டர் தொலைவிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், நாகாலாந்தில் 1,578 கிலோ மீட்டர் தொலைவிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆகியவற்றின் தரம், பராமரிப்பு குறித்து மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆய்வு செய்தார். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள், திட்ட ஒப்பந்ததாரர்கள் ஆகியோருடன் புதுதில்லியில் அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார்.
அப்போது பேசிய திரு கட்கரி, நீடித்த, திறன்மிக்க நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை உறுதி செய்வதற்கு இந்த திட்டப் பணிகளை உரிய நேரத்தில் நிறைவு செய்யுமாறும், தர நிலைகளை கடுமையாக பின்பற்றுமாறும், மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறும் வலியுறுத்தினார். போக்குவரத்து மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, பயணிகளின் வசதியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் முறையான சாலைப் போக்குவரத்து முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268197®=3&lang=1
***
SS/IR/RJ/RJ
(रिलीज़ आईडी: 2272181)
आगंतुक पटल : 9