வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், நாட்டின் நீண்டகால வளர்ச்சி இலக்குகளை அடைய முக்கியமான கருவியாக உள்ளன: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

प्रविष्टि तिथि: 11 JUN 2026 7:15PM by PIB Chennai

வளர்ந்த நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டு வரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், நாட்டின் நீண்டகால வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு மிக முக்கியமான கருவியாக இருக்கின்றன என்று மத்திய வர்த்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு. பியூஷ்கோயல் கூறினார்.

இந்த ஒப்பந்தங்கள் வெறும் வணிக ஒப்பந்தங்களாக மட்டுமல்லாமல், முதலீடுகளை ஈர்த்தல், புத்தாக்கத்தை ஊக்குவித்தல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் தரமான உற்பத்தி முறைகளை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு அடித்தளமாக விளங்குகின்றன.

சுவிட்சர்லாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இது இருதரப்புக்கும் இடையே பரஸ்பர நலனை அடிப்படையாகக் கொண்ட ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாகக் கூறினார்.

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் முதலீட்டையும், சுமார் 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார். வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பம் மற்றும் மூலதனத்துடன், இந்தியாவின் இளைய சக்தி மற்றும் வளர்ந்து வரும் சந்தை இணையும்போது, அது இரு தரப்பினருக்கும் பெரும் பயனைத் தரும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271802&reg=3&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2272146) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati