விவசாயத்துறை அமைச்சகம்
தோட்டக்கலை பயிர்கள் பயிரிடும் பரப்பு அதிகரிப்பு: வேளாண் அமைச்சகம் தகவல்
प्रविष्टि तिथि:
11 JUN 2026 6:28PM by PIB Chennai
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், 2025-26-ஆம் ஆண்டிற்கான தோட்டக்கலை பயிர்கள் குறித்த இரண்டாம் கட்ட முன்னேற்ற மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் தோட்டக்கலை பயிரிடும் பரப்பு 301.51 லட்சம் ஹெக்டேராகவும், மொத்த உற்பத்தி 3777.76 லட்சம் டன்களாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024-25-ஆம் ஆண்டின் இறுதி மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது, உற்பத்தியில் 1.90% வளர்ச்சியாகும்.
பழங்கள், காய்கறிகள், பூக்கள் மற்றும் மருத்துவப் பயிர்களின் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படுகிறது. குறிப்பாக, பழங்கள் உற்பத்தி 3.25% அதிகரித்து 1214.75 லட்சம் டன்களாகவும், காய்கறிகள் உற்பத்தி 1.47% அதிகரித்து 2210.00 லட்சம் டன்களாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியின் உற்பத்தியும் முறையே 2.25% மற்றும் 4.19% அதிகரிக்கும் எனத் தெரிகிறது. வெங்காயத்தின் சாகுபடி பரப்பு அதிகரித்தாலும், உற்பத்தி கடந்த ஆண்டை விடச் சற்றும் மாறாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இவ்வாண்டு தோட்டக்கலைத் துறையில் நிலையான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சி காணப்படுவது நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271770®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2272107)
आगंतुक पटल : 14