நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி மற்றும் லிக்னைட் எரிவாயுவாக்கல் திட்டங்கள்: ஹைதராபாத்தில் சாலை வழிப் பேரணி

प्रविष्टि तिथि: 11 JUN 2026 9:21PM by PIB Chennai

ஹைதராபாத்தில் நிலக்கரி மற்றும் லிக்னைட் எரிவாயுவாக்கல் திட்டங்கள் குறித்த முக்கிய சாலை வழி பேரணியை நிலக்கரி அமைச்சகம் இன்று வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதில் தொழில்துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் மத்திய-மாநில அரசு பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில், "இந்தியா உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நிலக்கரி இருப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், மெத்தனால், அம்மோனியா மற்றும் உரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு நாம் இறக்குமதியையே பெருமளவு நம்பியுள்ளோம். நிலக்கரி எரிவாயுவாக்கல் தொழில்நுட்பம், உள்நாட்டு நிலக்கரியை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, இறக்குமதிச் சுமையைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும், நிலக்கரி எரிவாயுவாக்கல் திட்டங்களை ஊக்கப்படுத்த மத்திய அமைச்சரவை ரூ.46,000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நிலக்கரி எரிவாயுவாக்கல் திட்டங்கள் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கும், தற்சார்பு இந்தியா கனவை நனவாக்குவதற்கும் ஒரு புதிய உந்துசக்தியாக அமையும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271894&reg=48&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2272079) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu