ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய ஜவுளித் துறையின் அபரிமிதமான வளர்ச்சி: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பெருமிதம்

प्रविष्टि तिथि: 11 JUN 2026 6:37PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையிலான பண்ணையிலிருந்து இழைக்கு, இழையிலிருந்து தொழிற்சாலைக்கு, தொழிற்சாலையிலிருந்து ஆடை வடிவமைப்பிற்கு, ஆடை வடிவமைப்பிலிருந்து வெளிநாட்டிற்கு என்ற திட்டத்தின் கீழ், இந்தியாவின் ஜவுளித் துறை உலகளாவிய போட்டித்தன்மை கொண்ட துறையாக உருவெடுத்துள்ளது என்று  மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிிராஜ் சிங் தெரிவித்தார்.

கடந்த 12 ஆண்டுகளில் இத்துறை அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் ஜவுளித் துறை 2025-26-ல் 190 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது 2030-க்குள் 350 பில்லியன் டாலரை எட்டும் இலக்குடன் உள்ளது. உள்நாட்டுச் சந்தை ரூ.6 லட்சம் கோடியிலிருந்து ரூ.16 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. தற்போது 5.3 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இத்துறை, அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

பி.எம். மித்ரா பூங்காக்கள், பி.எல்.ஐ திட்டம் மற்றும் தொழில்நுட்ப ஜவுளித் திட்டங்கள் போன்ற சீர்திருத்தங்கள் இத்துறையை வலுப்படுத்தியுள்ளன. மேலும், கைத்தறி மற்றும் கைவினைஞர்களுக்கு ரூ.2,000 கோடி முதலீட்டில் மேம்படுத்தப்பட்ட தறிகள், திறன் மேம்பாடு மற்றும் சந்தை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி மூலம் இந்தியா உலகளாவிய ஜவுளி மையமாக உருவெடுத்து, ‘வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற  இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271781&reg=3&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2272036) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada