குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு திட்டம் மூலம் மாற்றுத்திறனாளி விஸ்வகர்மா தயாரிப்புகளுக்கு சந்தை வாய்ப்பு
प्रविष्टि तिथि:
11 JUN 2026 12:20PM by PIB Chennai
கண்ணியம், அதிகாரம், வளமை ஆகிய 3 தூண்கள் மூலம் பாரம்பரிய கலைஞர்கள், கைவினைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மத்திய அரசின் முன்னோடித் திட்டமான பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வளமையை மேம்படுத்த மாற்றுத்திறனாளி விஸ்வகர்மா கலைஞர்களுக்காக குறு,சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சகம் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.
இந்த முன்முயற்சியின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் அவர்கள் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதற்கு சில்லரை விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது அவர்களுடைய தயாரிப்புகளுக்கு சந்தை வாய்ப்பை அதிகரித்து சிறந்த விற்பனை வாய்ப்புகளையும் உருவாக்கி, நீடித்த வாழ்வாதாரத்தை அளிக்கிறது.
ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு முன்முயற்சியின் கீழ், பல்வேறு நிலையங்களில் பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளி பயனாளிகள் சில்லரை விற்பனை நிலையங்களை அமைத்துள்ளனர்.
மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், புதுச்சேரி, மத்தியப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இன்று பொம்மை, விளையாட்டுப் பொருட்களை தயாரிப்பவர்களுக்காக 6 நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271522®=3&lang=1
***
SS/IR/RJ/KR
(रिलीज़ आईडी: 2271650)
आगंतुक पटल : 9