திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் 12 ஆண்டுகள்: இந்தியா ஒரு உலகளாவிய திறன் மையமாக உயர்வு
प्रविष्टि तिथि:
10 JUN 2026 6:52PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் தனது 12 ஆண்டுகால சாதனையை நிறைவு செய்துள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா 2047 இலக்கை நோக்கி, இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில் அமைச்சகம் ஒரு வலுவான திறன் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
2014-ல் 9,776-ஆக இருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் இன்று 13,888-க்கும் மேலாக உயர்ந்துள்ளன. காந்திநகர், மும்பை மற்றும் கான்பூரில் இந்திய திறன் நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 1.64 கோடிக்கும் அதிகமானோர் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், 56 லட்சத்திற்கும் அதிகமானோர் தொழிற்பழகுநர்களாக இணைந்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். உலகளாவிய திறன் போட்டிகளில் இந்தியா தனது தரவரிசையை 29-லிருந்து 13-க்கு உயர்த்தியுள்ளது. சர்வதேச அளவில் இந்திய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தையை உருவாக்க, திறன் இந்தியா சர்வதேச மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நவீன கல்வி மற்றும் தொழில் நுட்பங்களுடன் ஒருங்கிணைந்து, இந்தியாவின் இளைஞர் சக்தியை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற அமைச்சகம் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271285®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2271441)
आगंतुक पटल : 6