பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியின மக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'ரிசா' விற்பனையகம்

प्रविष्टि तिथि: 10 JUN 2026 5:23PM by PIB Chennai

நீடித்த  வாழ்வாதார நடவடிக்கைகள், மேம்பட்ட சந்தை வாய்ப்புகள் மூலம் இந்தியாவின் வளமான பழங்குடியின பாரம்பரியத்தைப் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திருமதி ரஞ்சனா சோப்ரா  வலியுறுத்தினார்.

மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்இந்திய பழங்குடியின கூட்டுறவு சந்தைபடுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு இணைந்து, பழங்குடியின மக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'ரிசா' விற்பனையகத்தை அவர் தொடங்கி வைத்துப் பேசினார்.

இந்த விற்பனை நிலையங்களில், பழங்குடியின மக்கள் தயாரிக்கும் துணி வகைகள், பூந்தையல் (எம்ப்ராய்டரி), கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான பிரத்யேக  'ரிசா - தொன்மையான பழங்குடியினர்' என்ற உயர்தர வர்த்தக முத்திரை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், புது தில்லியில் கன்னாட் பிளேஸில் உள்ள ராஜீவ் காந்தி கைவினைப் பொருட்கள் மாளிகையில் இதற்கான பிரத்யேக விற்பனை அரங்கும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், பழங்குடியின சமூகங்களின் பொருளாதார மேம்பாட்டின் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இத்திட்டம் அமைந்துள்ளது.

பழங்குடியின மக்களின் தயாரிப்புகளுக்குத் தனித்துவ வர்த்தக முத்திரையை உருவாக்கும் வகையில், பழங்குடியின கைவினைஞர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை வலுப்படுத்துதல், வடிவமைப்பு மேம்பாடு, தயாரிப்பு பல்வகைப்படுத்தலை எளிதாக்குதல், உயர்தர உள்நாட்டு, சர்வதேச சந்தைகளில், பழங்குடியின பாரம்பரியத்தை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271214&reg=48&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2271409) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी