அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசியக் கல்விக் கொள்கை, கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களில் ஒன்றாக உள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
10 JUN 2026 5:10PM by PIB Chennai
தேசியக் கல்விக் கொள்கை, நாட்டின் கல்வித்துறையில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறைகளின் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டுகால சாதனைகளில், மிகச்சிறந்த அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கல்வித் திட்டங்களில் முடங்கி விடாமல், மாணவர்களின் திறமை, விருப்பங்களுக்கு ஏற்ற கல்வியைத் தொடர, இந்தக் கல்விக் கொள்கை வழிவகுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
'தி வீக் எஜுகேஷன் கான்ளேவ் 2026' நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த பத்தாண்டுகளில் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாக தேசிய கல்விக் கொள்கையின் அறிமுகம் என்று கூறினார். பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களின் சிறைக்கைதிகளாக இருப்பதிலிருந்து, மாணவர்களை இந்த கொள்கை விடுவித்துள்ளது" என்று அவர் கூறினார். முந்தைய கல்வி முறை மாணவர்களின் ஆர்வத்தைக் கருத்தில் கொள்ளாமல், குறிப்பிட்ட கல்விப் பிரிவுகளைத் தொடர கட்டாயப்படுத்தும் வகையில், நெகிழ்வுத் தன்மையும், தனிப்பட்ட விருப்பத் தேர்வும் குறைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய கல்விக் கொள்கையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட நெகிழ்வுத்தன்மை, மாணவர்கள் தங்களது திறமைக்கேற்ப, கல்விப் பாதையை மாற்றியமைக்க உதவியுள்ளது என்று அமைச்சர் கூறினார். வழக்கமான தொழில் சார்ந்த வழிமுறைகளைத் தொடர விரும்பாத மாணவர்கள், தற்போது உயிரித் தொழில்நுட்பம் முதல் இலக்கியம், பிற வளர்ந்து வரும் துறைகள் வரை பல்வேறு துறைகளை ஆய்வு செய்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றுள்ளனர் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271209®=48&lang=1
***
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2271407)
आगंतुक पटल : 8