வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக வர்த்தக அமைப்பின் கட்டமைப்பிற்குள் உள்நாட்டுத் தொழில்துறையைப் பாதுகாப்பதில் வர்த்தகத் தீர்வுகள் இயக்குநரகம் முக்கியப் பங்கு வகிக்கிறது - தலைமை இயக்குநர் திரு அமிதாப் குமார்

प्रविष्टि तिथि: 10 JUN 2026 2:07PM by PIB Chennai

உள்நாட்டுச் சட்டங்கள், உலக வர்த்தக அமைப்பின்  கட்டமைப்பின் கீழ், இறக்குமதி விலை குறைப்பு நடவடிக்கைகள், மானியம் போன்றவற்றிற்கு எதிரான நடவடிக்கைகள், பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, அதற்கேற்ப பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறது என்று வர்த்தகத் தீர்வுகள் தலைமை இயக்குநரும், கூடுதல் செயலாளருமான திரு அமிதாப் குமார் கூறினார்.

மத்திய வர்த்தகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வர்த்தகத் தீர்வுகள் இயக்குநரகம், புதுதில்லியில் அதன் தலைமையகத்தில், இந்தியத் தொழில்துறைக்கு சம அளவிலான போட்டிச் சூழலை உருவாக்கும் வர்த்தகத் தீர்வு நடவடிக்கைகள் என்ற கருப்பொருளில், இன்று பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கருத்தரங்கில் உரையாற்றிய அவர், இந்தியாவின் ஒருங்கிணைந்த வர்த்தகத் தீர்வு ஆணையம் வகிக்கும் பங்களிப்பை விரிவாக எடுத்துரைத்தார்.

முக்கிய நிறுவன சாதனைகள், சீர்திருத்தங்கள், கொள்கை முன்முயற்சிகளை முன்னிலைப்படுத்தும், வர்த்தகத் துறையின் ஊடகத் தொடர்பு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

வர்த்தகத் தீர்வு நடவடிக்கைகள், நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்வதற்கான கருவியாக உள்ளது என்றும், இறக்குமதிக்கானக் கட்டுப்பாடுகள் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். உள்நாட்டுத் தொழில்துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், மானியம், அதிக அளவிலான இறக்குமதி போன்ற நடைமுறைகளைக் கையாள்வதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நியாயமான விலையில் முறையான இறக்குமதி நடைமுறைகளைத்  தொடர அனுமதிக்கும் அதே வேளையில், நியாயமான போட்டியை மீட்டெடுப்பதும், இந்திய உற்பத்தியாளர்களுக்கு சம அளவிலான  வாய்ப்பை உறுதி செய்வதும் இந்த அமைப்பின் நோக்கமாக உள்ளது  என்று திரு அமிதாப் குமார் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271060&reg=3&lang=1

***

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2271290) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati