நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி, லிக்னைட் வாயுவாக்கல் திட்டங்கள் தொடர்பான கூட்டம் ஐதராபாதில் நாளை நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 10 JUN 2026 10:37AM by PIB Chennai

நிலக்கரி, லிக்னைட் வாயுவாக்கல் திட்டங்கள் குறித்து எடுத்துரைப்பதற்கான கூட்டம் ஐதராபாதில் 2026 ஜூன் 11 அன்று  நடைபெறுகிறது. மத்திய நிலக்கரி அமைச்சகம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அண்மையில், தில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கிடைத்த வரவேற்பு இந்தியாவின் நிலக்கரி வாயுவாக்கல் சூழல் மீது அத்துறை சார்ந்த பங்குதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை உறுதிபடுத்தியது.

ஐதராபாதில் நாளை நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராகவும் இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே கௌரவ விருந்தினராகவும் பங்கேற்கின்றனர். அத்துடன் நிலக்கரித்துறை செயலாளர் திரு விக்ரம் தேவ் தத், கூடுதல் செயலாளர் திரு சனோஜ் குமார் ஜா, அமைச்சக உயர் அதிகாரிகள், மத்திய – மாநில அரசு பிரதிநிதிகள், நிலக்கரி, லிக்னைட் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில்நுட்ப வழங்குநர்கள், தொழில்துறை சங்கப்பிரதிநிதிகள், முதலீட்டாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

நிலக்கரி வாயுவாக்கல் என்பது நிலக்கரியை சிந்தஸிஸ் வாயு எனப்படும் தொகுப்பு வாயுவாக மாற்றும் ஒரு மாற்றத்தக்க தொழில்நுட்பமாகும்.  இந்த வாயுவை மெத்தனால், அமோனியம் நைட்ரேட், செயற்கை இயற்கை எரிவாயு, பல்வேறு தொழில்துறை வேதிப் பொருட்கள் போன்ற மதிப்புக்கூட்டுதல் பொருட்களை தயாரிக்க பயன்படுத்த முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270980&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR

 


(रिलीज़ आईडी: 2271089) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu