வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவின் மருந்துத் துறை, உலகளாவிய நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
प्रविष्टि तिथि:
09 JUN 2026 8:39PM by PIB Chennai
உலகம் முழுவதும் தரமான சுகாதார சேவைகள், குறைந்த செலவில் பரவலாகக் கிடைப்பதை உறுதி செய்வதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை இந்தியாவின் மருந்துத் துறை பிரதிபலிக்கிறது என்று மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற மருந்துத் துறை தொடர்பான உலகளாவிய பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், நம்பகமான உலகளாவிய மருந்துத் துறை ஒத்துழைப்பு நாடாக இந்தியாவின் பங்கை எடுத்துரைத்த அமைச்சர், இத்துறை தரம், நம்பகத்தன்மை, குறைந்த விலை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் திறனை வெளிப்படுத்தியுள்ளது என்றார். கொவிட்-19 பெருந்தொற்றைக் குறிப்பிட்ட அவர், இந்தியா உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், உலக தென்பகுதி நாடுகள், பிற வளரும் பொருளாதார நாடுகள் உட்பட ஏராளமான நாடுகளுக்கு மருந்துகளையும் தடுப்பூசிகளையும் வழங்கியதை நினைவு கூர்ந்தார்.
நம்பிக்கை, புதுமை, ஒத்துழைப்பு ஆகியவை இந்தியாவின் மருந்துத் துறையின் வலிமைக்கு அடித்தளமாக அமைகின்றன என்று அவர் கூறினார். இத்துறையின் சிறந்த தரநிலைகள், உற்பத்தித் திறன்கள் ஆகியவை காரணமாக, இந்திய மருந்துகள் உலகளாவிய சந்தைகளில் பரவலாக விரும்பப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும், உற்பத்தி செய்யவும் அழைப்பு விடுத்தார்.
2014-15-ம் நிதியாண்டில் சுமார் 14 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் மருந்து ஏற்றுமதி, 2025-26-ம் நிதியாண்டில் சுமார் 31 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது என்றும், 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துகள் சென்றடைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
2026 ஜூலை 30–31 தேதிகளில் நடைபெறவுள்ள உலகளாவிய மருந்து ஒழுங்குமுறை மாநாடு 2026, செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐஃபெக்ஸ் 2026 (iPHEX 2026) ஆகியவற்றிற்கான அறிமுக நிகழ்வு இந்நிகழ்ச்சியின்போது நடைபெற்றது. இவ்விரு நிகழ்வுகளையும் விளக்கும் விளம்பரக் காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270905®=3&lang=1
***
TV/VK/PD
(रिलीज़ आईडी: 2271039)
आगंतुक पटल : 8