பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
தற்சார்புடைய ஊராட்சிகள் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான பயணத்தை விரைவுபடுத்தும்: பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் திரு விவேக் பரத்வாஜ்
प्रविष्टि तिथि:
09 JUN 2026 6:59PM by PIB Chennai
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், குஜராத் அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையுடன் இணைந்து, தற்சார்பு ஊராட்சிகள் திட்டம் குறித்த ஒரு விழிப்புணர்வுப் பயிலரங்கத்தை இன்று (2026 ஜூன் 09) காந்திநகரில் ஏற்பாடு செய்தது.
இந்தப் பயிலரங்கில், மூத்த அரசு அதிகாரிகள், நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், குஜராத் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். 100-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பயிலரங்கில் நேரடியாகக் கலந்துகொண்டனர். அதே நேரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் இணையவழியாக இணைந்தனர். பங்கேற்பாளர்களில் 78 பஞ்சாயத்து பிரதிநிதிகளும் அடங்குவர்.
பயிலரங்கில் சிறப்புரையாற்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், தற்சார்பு ஊராட்சிகள் தொடர்பான தொலைநோக்குப் பார்வையையும், தேசிய இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதில் அவற்றின் பங்கையும் சுட்டிக் காட்டினார். தேசிய மாற்றத்தின் முக்கிய முகவர்களாக ஊராட்சிகள் திகழ்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
ஒருவர் விட்டுச்செல்லும் மரபுதான் உண்மையான தலைமைத்துவத்தை வரையறுக்கிறது என்று குறிப்பிட்ட அவர், தங்கள் பகுதிகளில் அர்த்தமுள்ள, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த, ஊராட்சித் தலைவர்கள் புதுமையாகச் சிந்தித்து உறுதியாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தத் தொடர்புப் பயிலரங்கில், கலந்துரையாடல் கேள்வி-பதில் அமர்வு இடம்பெற்றது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், குஜராத் பஞ்சாயத்து ராஜ் துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார். இந்த அமர்வு, சந்தேகங்களுக்குத் தீர்வு காணவும், முன்மொழிவுகளை விவாதிக்கவும், ஆக்கப்பூர்வமான உரையாடல், அறிவுப் பரிமாற்றம் ஆகியவற்றை எளிதாக்கவும் ஒரு தளத்தை வழங்கியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270853®=3&lang=1
(Release ID : 2270853)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2270939)
आगंतुक पटल : 15