குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான சிறப்பு திட்டத்தின் மூலம் தொழில் முனைவை ஊக்குவிக்கிறது குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம்

प्रविष्टि तिथि: 09 JUN 2026 1:43PM by PIB Chennai

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் தேசிய எஸ்சி-எஸ்டி மையத் திட்டம், அக்டோபர் 2016 முதல் பட்டியலின, பழங்குடியின தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன் மூலம் இத்திட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாகைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோரான திரு பல்வந்த் லால் சுமனின் எழுச்சியூட்டும் கதை, இத்திட்டத்தின் பலன்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவம் கொண்ட ஒரு இயந்திரப் பொறியாளரான அவர், ஒரு நிறுவனத்தை உருவாக்கும் கனவுடன் தனது தொழிலைத் தொடங்கினார்.

 

தேசிய எஸ்சி, எஸ்டி மைய சிறப்புக் கடன் மூலதன மானியத் திட்டம் அவருக்கு முக்கிய ஆதரவை வழங்கியது. அவரது நிறுவனம் தனது சந்தை எல்லையை விரிவுபடுத்தி 16 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியது.

திரு பகதூர்பாய் பஞ்சியாபாய் சௌத்ரியின் வெற்றிக் கதையானது, இத்திட்டம் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் நிறுவனங்களை எவ்வாறு வலுப்படுத்துகிறது என்பதற்கு ஒரு நேர்மறையான எடுத்துக்காட்டாகும். குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த இவர், மரச்சாமான்களைத் தயாரிப்பதற்கான நிறுவனத்தை நிறுவி இத்திட்டத்தின் மூலம் பயன் அடைந்தார்.

இப்போதுவரை, 1.79 லட்சத்திற்கும் அதிகமானோர்  இத்திட்டத்தின் கீழ் பல்வேறு பலன்களைப் பெற்றுள்ளனர். இத்திட்டம் குறித்த மேலும் தகவல்களுக்கு, https://www.scsthub.in/

 என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

 

மேலும் விவரங்களுக்கு இன் ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270639&reg=3&lang=1

***

 

(Release ID : 2270639)

SS/PLM/SH


(रिलीज़ आईडी: 2270859) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी