அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் அறிவியல் மையக் கூட்டமைப்பின் நடப்பாண்டிற்கான முதலாவது கூட்டம் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 09 JUN 2026 3:23PM by PIB Chennai

இந்தியாவின் 2026-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக இந்திய தேசிய அறிவியல் மையம், பிரிக்ஸ் அறிவியல் மையக் கூட்டமைப்பின் 2026-ம் ஆண்டுக்கான முதலாவது கூட்டத்தை நடத்தியது. நீடித்த வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், தென்பகுதி நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்  என்ற தலைப்பின் கீழ், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பெலாரஸ், நைஜீரியா, வியட்நாம் ஆகிய 10 நாடுகளின் அறிவியல் மையங்கள் பங்கேற்று பொறுப்புமிக்க சமத்துவமான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கான பகிரப்பட்ட பிரகடனத்தை முன்னெடுப்பது குறித்து விவாதித்தன.

இக்கூட்டத்தை இந்திய தேசிய அறிவியல் மையத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான துணைத்தலைவர் பேராசிரியர் டெபசிஸ் மித்ரா வழிநடத்தி அறிவியல் மையங்களிடையே முறையான விவாதங்களை ஒருங்கிணைத்தார்.

இக்கூட்டத்தில் அறிவியல், நீடித்த வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த வரைவுப்பிரகடனம் குறித்து பரிசீலிக்கப்பட்டது.

பகிரப்பட்ட கணினி உள்கட்டமைப்பு, கூட்டுத்தரவுத் தளங்கள், பன்மொழி செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் ஆகியவற்றில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. கூட்டுப் பணிக்குழுக்கள், ஆராய்ச்சியாளர்கள், பரிமாற்றத் திட்டங்கள், வெளிப்படையான வள அறிவியல் உள்கட்டமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இக்கூட்டத்தின் பரிந்துரைகள், திருத்தப்பட்ட வரைவு பிரகடனத்தில் சேர்க்கப்படும்.

பிரிக்ஸ் அறிவியல் மைய கூட்டமைப்பின் 2-வது நேரடிக் கூட்டம், 2026 ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் ஐதராபாத் ஐஐடி-யில் நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270686&reg=3&lang=1

 

****

TV/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2270845) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali