பிரதமர் அலுவலகம்
சமூக நலனுக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட உண்மையான ஞானமிக்க நபரின் குணங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 JUN 2026 10:27AM by PIB Chennai
சமூக நலனுக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட உண்மையான ஞானமிக்க நபரின் குணங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற உணர்வின் மூலம் உத்வேகம் அடைந்து, தொடர்ச்சியான முயற்சிகளால் நாம் தற்போது வலிமையான தற்சார்பு இந்தியா என்ற நிலையை நோக்கி முன்னேறுகிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
“என்றும் உன்னதமிக்க, நற்பணியில் ஈடுபட்டு சமூகத்தின் முன்னேற்றம், நலனுக்காக தம்மை அர்ப்பணித்து, பிறரின் பயன்மிக்க சொற்களையும் செயல்களையும் மதித்து அவர்கள் மீது எந்தவித வெறுப்புணர்வும் இல்லாத ஒருவரே உண்மையான அறிவாளியாவார்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270523®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2270787)
வருகையாளர் எண்ணிக்கை : 60
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam