பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAY 2026 9:14AM by PIB Chennai
குஜராத் மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அம்மாநில மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்த சிறப்பான நாளில் குஜராத் மக்களுக்கு வாழ்த்துகள். இந்த நாள் குஜராத்தின் செழுமையான வரலாறு, துடிப்பான கலாச்சாரம் மற்றும் ஆற்றலின் கொண்டாட்டமாகும். இந்தியாவின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள இம்மாநில மக்களின் சுறுசுறுப்பும், முயற்சிகளும் குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் குஜராத் தொடர்ந்து வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்டட்டும்."
----
(Release ID: 2257173)
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2270359)
வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Bengali-TR
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam