PIB Backgrounder
azadi ka amrit mahotsav

வணிகம் செய்வதை எளிதாக்குதல்: நாட்டின் வணிகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்

प्रविष्टि तिथि: 07 JUN 2026 10:47AM by PIB Chennai

டிஜிட்டல் ஆளுகை, ஒழுங்குமுறை எளிமையாக்கம், நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட விரிவான சீர்திருத்தங்கள் இந்தியாவின் வணிகச் சூழலை மாற்றியமைத்துள்ளன. இதன் விளைவாக, புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் போன்றவற்றை ஆதரிக்கும் முயற்சிகள் மூலம், வணிக அமைப்புகள் வேகமாகவும் காகிதமில்லாத செயல்முறையிலும் மாறியுள்ளன. டிஜிட்டல் நிலப் பதிவேடுகள், ஒற்றைச் சாளர அனுமதிகள், நெறிப்படுத்தப்பட்ட தொழிலாளர் நடைமுறைகள், சுற்றுச்சூழல் ஒப்புதல்கள், அனுமதி நடைமுறைகள் போன்றவை நவீனமயமாக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் கொள்முதல் தளங்கள், சரக்கு போக்குவரத்து சீர்திருத்தங்கள், ஒருங்கிணைந்த வர்த்தக உட்கட்டமைப்பு ஆகியவற்றின் வருகையால் சந்தை இணைப்பு மேம்பட்டுள்ளது. எளிதான முறையில் கடன் பெறுதல், எளிமைப்படுத்தப்பட்ட வரி நடைமுறைகள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை அனைத்துத் துறைகளிலும் வணிகச் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துகின்றன. இணக்க நடைமுறைகளை எளிதாக்குதல், சில அம்சங்கறை குற்றமற்றதாக்குதல், திவால்நிலைத் தீர்வு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் ஆகியவை ஒழுங்குமுறைச் சூழலை ஊக்குவிக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், இந்த நடவடிக்கைகள் முதலீட்டாளர் நம்பிக்கையை வலுப்படுத்த பங்களிக்கின்றன. இது இந்தியாவின் மேம்பட்ட உலகளாவிய தரவரிசைகளில் பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் வணிகச் சூழலை மாற்றுதல்:              

இந்தியா தனது வணிக ஒழுங்குமுறைச் சூழலை மேம்படுத்துவதற்காக, கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அரசின் கவனம், இணக்க விதிகளை அதிகம் சார்ந்திருந்த அமைப்பிலிருந்து, படிப்படியாக வசதிகளை உருவாக்கும் ஒரு சூழலமைப்பிற்கு மாறியுள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள், செயல்முறைகள் அனைத்திலும் வேகம், வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் விளைவாக, இந்தியாவின் வணிகச் சூழலும், வணிகம் செய்வதற்கான எளிமையும் மேம்பட்டுள்ளது.

உலக வங்கியின் 'டூயிங் பிசினஸ் ரிப்போர்ட் 2020' போன்ற உலகளாவிய மதிப்பீடுகளில் இந்த முன்னேற்றம் பிரதிபலிக்கிறது . இந்தியாவின் தரவரிசை 2014-ல் 142-வது இடத்திலிருந்து 2019-ல் 63-வது இடத்திற்கு முன்னேறியது. இது ஐந்து ஆண்டுகளில் 79 இடங்கள் அதிகரித்ததைக் குறிக்கிறது.

 உலகப் போட்டித்திறன் தரவரிசை 2025, நாட்டின் பொருளாதாரச் செயல்பாடு, அரசு, வணிகத் திறன், வணிகங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொள்கிறதுஇதில் இந்தியாவின் தரவரிசை 2021-ல் 43-வது இடத்திலிருந்து 2025-ல் 41-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது வலுவான வணிகச் சூழல், மேம்பட்ட ஆளுகை சிறந்த டிஜிட்டல் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை எடுத்துக்காட்டுகிறது.

 டிஜிட்டல் மாற்றத்தை மதிப்பிடும் உலக வங்கியின் குறியீடானது , 2020, 2022, 2025-ம் ஆண்டுகளில் இந்தியாவை '' பிரிவில் வகைப்படுத்தியுள்ளது.

வணிகச் சீர்திருத்தங்களை மேம்படுத்துதல்:

கடந்த 12 ஆண்டுகளில், இந்தியாவில் தொழில் தொடங்குதல், முறைப்படுத்துதல் செயல்முறைகளை எளிதாக்குவதற்காக அரசு முக்கிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள், நடைமுறைத் தடைகளைக் குறைத்து, தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வேகமான நடைமுறகளைச் சாத்தியமாக்கியுள்ளன.

ஸ்டார்ட்-அப் இந்தியா:

2016 ஜனவரியில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின் நோக்கம், தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதும், ஒரு வலுவான புத்தொழில் சூழலமைப்பை உருவாக்குவதும் ஆகும். இது இந்தியாவை வேலை தேடுபவர்களின் நாடாக இல்லாமல், வேலைகளை உருவாக்குபவர்களின் நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2016-ல், வெறும் 502 புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு , 308 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இருப்பினும், மார்ச் 2026-க்குள், 2.23 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு , 23.3 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விரைவான வளர்ச்சி, வேலைவாய்ப்பையும் தொழில்முனைவோர் வாய்ப்புகளையும் விரிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்தப் புத்தொழில் நிறுவனங்களில் சுமார் 48% நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநரோ அல்லது பங்குதாரரோ உள்ளார். இது அனைவரையும் உள்ளடக்கும் தன்மையைப் பிரதிபலிக்கிறது.

ஸ்பைஸ் பிளஸ் படிவம்:

2020-ல் ஸ்பைஸ் பிளஸ் ( SPICe+) படிவம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வணிகங்களைத் தொடங்குவதும் முறைப்படுத்துவதும் எளிதாக மாறியது. இந்த ஒருங்கிணைந்த இணையப் படிவம், 3 மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகளின் 11 சேவைகளை வழங்குகிறது.

அனுமதி நடைமுறைகளை நெறிப்படுத்துதல்:

முந்தைய சீர்திருத்தங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், அனுமதி நடைமுறைகளை நெறிப்படுத்தவும், செயல்முறைத் தாமதங்களைக் குறைக்கவும் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்கு முன்பு, வணிக அனுமதிகள், உரிமங்களைப் பெறுவதில் பெரும்பாலும் நீண்ட நடைமுறைகள், விரிவான ஆவணப் பணிகள், பல ஒழுங்குமுறை ஒப்புதல்கள் தேவைப்பட்டன. இப்போது ஒப்புதல் செயல்முறைகளை எளிமையாக்கவும் டிஜிட்டல் மயமாக்கவும் அரசு குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

நவம்பர் 2025-ல் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், அனுமதி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன. 2020-ம் ஆண்டின் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு, 13 மத்திய தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக ஒரே விரிவான சட்டத்தைக் கொண்டுவந்தது. மேலும், அனுமதி செயல்முறையை எளிதாக்குவதற்காக இது பின்வரும் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது:

மின்னணு ஒற்றைப் பதிவு, ஒற்றை அறிக்கை சமர்ப்பிப்பு, ஐந்தாண்டுகளுக்குச் செல்லுபடியாகும் ஒற்றை அகில இந்திய உரிமம் ஆகியவை வணிகம் செய்வதை எளிதாக்கியுள்ளன. இந்த நடவடிக்கைகள் நடைமுறைத் தாமதங்களைக் குறைத்து, இணக்கச் செலவுகளைக் குறைத்து வணிகச் செயல்பாடுகளை விரைவுபடுத்துகின்றன. இந்த சீர்திருத்தங்கள் அனுமதி நடைமுறைகளை நெறிப்படுத்தி, அனைத்துத் துறைகளிலும் வணிக வசதிகளை மேம்படுத்தியுள்ளன.

சந்தை இணைப்பை வலுப்படுத்துதல்:

டிஜிட்டல் பொதுக் கொள்முதல் தளங்கள், டிஜிட்டல் வர்த்தக கட்டமைப்புகள், ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவர்து சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் மூலம், வணிகங்களுக்கான சந்தை அணுகலை அரசு கணிசமாக மேம்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வாங்குவோர், விற்போர், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்களை இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முன்முயற்சிகள், முழுமையான தீர்வுகள், பரந்த சந்தை அணுகல்மிகவும் திறன் வாய்ந்த விநியோகச் சங்கிலிகளை உறுதிசெய்து, குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சிறு வணிகங்களுக்குப் பயனளிக்கின்றன.

மேம்படுத்தப்பட்ட பல்முனை இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கத்தின் மூலம், 2014-க்குப் பிறகு இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துப் போட்டித்திறனும் மேம்பட்டுள்ளது . 2014-ல் 54-வது இடத்தில் இருந்த இந்தியா, 2023-ல் உலக வங்கி சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டில் 38-வது இடத்தைப் பிடித்தது.

ஜிஇஎம் (அரசு மின்னணு சந்தை):      

பொதுக் கொள்முதலை டிஜிட்டல் மயமாக்கவும், அதை மேலும் நெறிப்படுத்தப்பட்டதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்காக ஜிஇஎம் தளம் 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது . இந்த மின்-சந்தை, பெண் தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு நிறுவனங்கள், கைவினைஞர்கள், சுய உதவிக் குழுக்கள், மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர் ஆகயோரைப் பிரதான கொள்முதலுடன் இணைக்கிறது.

ஜிஇஎம், 2025-26-ம் நிதியாண்டில் 5 லட்சம் கோடி மொத்த சரக்கு மதிப்பை  கடந்துள்ளதுஒட்டுமொத்தமாக 18.4 லட்சம் கோடி சரக்கு மதிப்பை அடைந்துள்ளது .

கடன் உத்தரவாதத் திட்டம்:

கடன் உத்தரவாதத் திட்டங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்குப் பிணையமில்லா அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதமில்லா கடன்களை வழங்குவதன் மூலம், வணிகத்தின் நிலையை மேம்படுத்துகின்றன. இத்திட்டங்கள் கடன் வழங்குபவர்களுக்கான இடரைக் குறைத்து, தொழில்முனைவோருக்கு நிதியுதவியை எளிதாகப் பெற வழிவகுத்து, புத்தாக்கத்தை ஊக்குவித்து, வணிகச் சூழலை எளிமையாக்குகின்றன.

சரக்கு - சேவை வரி:

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு சேவை 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, வணிகங்கள், நுகர்வோர் இருவருக்கும் சுமையாக இருந்த, தனித்தனியான சிக்கலான மறைமுக வரி விதிப்பு முறைக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது. ஜிஎஸ்டி-க்கு முன்பு, கலால் வரி, சேவை வரி, மதிப்புக்கூட்டு வரி, மத்திய விற்பனை வரி, பிற வரிகள் போன்ற எண்ணற்ற வரிகளைக் கொண்ட ஒரு வரி கட்டமைப்பு இருந்தது. இந்த வரிகள் ஒவ்வொன்றும் அதற்கே உரிய இணக்கச் சவால்களையும் குறைபாடுகளையும் கொண்டிருந்தன. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் வணிகம் மேலும் எளிதானது.

 செப்டம்பர் 2025-ல் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் கூடுதல் உந்துதலை அளித்தன. எளிமைப்படுத்தப்பட்ட இரு-விகித அமைப்புக்கு மாறிய இந்த மாற்றம், இணக்க, பரிவர்த்தனைச் செலவுகளைக் குறைத்துத் தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது.

பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2017-ல் சுமார் 60 லட்சத்திலிருந்து ஏப்ரல் 2026-ல் 1.64 கோடிக்கும் அதிகமாக அதிகரித்திருப்பது , வரி அடிப்படை விரிவாக்கத்தில் இதன் தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

வணிகத்திற்கு உகந்த சூழலை வளர்த்தல்:

கடந்த சில ஆண்டுகளில், இந்தியா மிகவும் வெளிப்படையான, சுலபமான வணிகச் சூழலை உருவாக்குவதற்காக விரிவான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதுஇந்த சீர்திருத்தங்கள் ஒன்றிணைந்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தி, தொழில்முனைவோரை ஊக்குவித்து, உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த ஒரு வணிக மையமாக இந்தியாவின் நிலையை மேம்படுத்தியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269961&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2270014) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Gujarati