மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மொழிபெயர்ப்புத் தள டிஜிட்டல் உட்கட்டமைப்பை இணைந்து உருவாக்க, டிஜிட்டல் இந்தியா பாஷினி - காத்மாண்டு பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

प्रविष्टि तिथि: 06 JUN 2026 9:46PM by PIB Chennai

மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு, இந்தியா, நேபாளம் இரண்டு முழுவதும் மொழி செயற்கை நுண்ணறிவு, பன்மொழி டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு கூட்டு கட்டமைப்பை நிறுவ உள்ளது. இதற்காக நேபாளத்தின் காத்மாண்டு பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு - செயற்கை நுண்ணறிவு மையத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாஷினி பிரிவு கையெழுத்திட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி திரு அமிதாப் நாக், காத்மாண்டு பல்கலைக்கழகத்தின் இணைத் தலைவர் பேராசிரியர் பால் கிருஷ்ண பால் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

புதுதில்லியில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்புகளின்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஷிஷிர் கானல் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் இணைந்த உறுதிப்பாட்டை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டியது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இரு அமைப்புகளும் உயர்தர நேபாள மொழித் தரவுத்தொகுப்புகள், பேச்சுத் தொகுப்புகள், பேச்சிலிருந்து உரை, உரையிலிருந்து பேச்சு, இயந்திர மொழிபெயர்ப்பு, பன்மொழி உரையாடல் செயற்கை நுண்ணறிவுத் திறன்கள் உள்ளிட்ட பன்மொழி செயற்கை நுண்ணறிவு வளங்களை உருவாக்குவதில் இணைந்து செயல்படும். அத்துடன், இந்தியா-நேபாளப் பிராந்தியம் முழுவதும் உள்ள குறைந்த வளங்களைக் கொண்ட மற்றும் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத மொழிகளின் மொழியியல், இலக்கியப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், அவற்றை டிஜிட்டல் மயமாக்குவதற்கும் இந்தக் ஒத்துழைப்பு வகை செய்யும்இதன் மூலம், அழிவின் விளிம்பில் உள்ள மொழிகளைச் சார்ந்த சமூகங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகளையும் சேவைகளையும் தங்கள் தாய்மொழியில் பெற இயலும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269899&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2269989) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी